வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
ஆனந்தமான வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. அஷ்டமச் சனி முடிவிற்கு வரப்போகிறது. துயரங்கள் அகலும் உடலில் இருந்த பிணிகள் அகலும். சிகிச்சை பலன் தரும். உற்சாகமாக பணிபுரிவீர்கள். அசையாச் சொத்துகள் அமையும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பு, பணிகளை முடிக்க சக ஊழியர்கள் உதவுவார்கள். வணிகர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக வியாபாரம் நடக்கும்.இந்த வாரத்தில் வரன் அமைந்து விடும்.
வைகாசியில் திருமணம் நடக்கும். இனி தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும்.பாகப்பிரிவினைகள் சாதகமாகும். சகோதர சகோதரிகள் மீண்டும் நட்பாகுவார்கள்.பெற்றோரை பிரிந்த பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள்.குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். 26.3.2025 அன்று மாலை 3.14 முதல் 28.3.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.ஞாபக சக்தி குறையும். அமாவாசையன்று கற்பக விநாயகரை வழிபட வளர்ச்சிகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406