தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர்
- பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.
- உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.
இரண்யகசிபு தன் அண்ணனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை தன் மகன் துதிப்பதைப் பார்த்து தன் மகனே தனக்கு எதிரியாகி விட்டானே என்று நினைத்தான்.
ஆகவே தன் மகனைக் கொல்வதற்காக பற்பல கொடுமையான வழிகளைக் கையாள, நினைத்தான்.
ஒவ்வொரு முறையும், இரணியகசிபு தன் மகனைக் கொல்ல நினைத்த வழிகளில் விஷ்ணு வந்து குறுக்கிட்டு பிரகலாதனைக் காத்து நின்றான்.
பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.
பகவான் விஷ்ணுவைத்தான் தன்னுடைய காவலரன் (கடவுள் நாராயணன்) என்று நம்பினான்.
இரண்யகசிபு தன்னுடைய முயற்சி எல்லாம் தோல்வியடைந்ததை நினைத்து ஒரு மாலைப் போது மிகவும் கடும் கோபம் கொண்டு கோபத்தினால் தன்னுடைய மகனை இழுத்து வந்து ஒரு கல் தூணைக் காண்பித்து, உன்னுடைய விஷ்ணு இக்கல் தூணில் இருக்கிறானா? என்று வினவினான்.
பக்தனான பிரகலாதன் மிகவும் வினயத்துடன் கைகளைக் குவித்து, என்னுடைய இறைவன் ஸ்ரீமந் நாராயணன் எங்கும் உள்ளான், எல்லா இடத்திலும் எப்போதும் உள்ளான். அவன் கல்லிலும் இருப்பான், சிறு துரும்பிலும் இருப்பான் என்று பதிலுரைத்தான்.
உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.
அப்போது பகவான் விஷ்ணு பயங்கர கர்ஜனையுடன், மின்னல் வேகத்தில் அத்தூணியிலிருந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்தார்.