ஆன்மிக களஞ்சியம்

திருமகளும் ஐயப்பனும் அவதரித்த பங்குனி உத்திரத் திருநாள்

Published On 2024-01-25 12:31 GMT   |   Update On 2024-01-25 12:31 GMT
  • கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள்.
  • அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள்.

கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள்.

அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள்.

பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.

எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது.

உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான்.

அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம்

12 என்ற எண்ணுக்குச் சிறப்பு சேர்க்கும் இந்த நாள், பன்னிரு கையும், பன்னிரு விழியும், பன்னிரு செவியும் கொண்ட வேலவனின் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் தோறும் சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பழநியம்பதியில் பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு கொடுமுடிக்குச் சென்று அங்கு பாயும் காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வந்து விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

காவிரியைப் பெருமைப்படுத்தும் நாள் இந்த நாள்.

Tags:    

Similar News