ஆன்மிக களஞ்சியம்
null

திருமகளே தீபமாக கிரிவலம் வந்த நாள்

Published On 2023-10-11 11:52 GMT   |   Update On 2023-10-17 10:10 GMT
  • திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
  • வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்

திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில் வரும் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.

இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்வு வருமாறு:

ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம்.

ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.

அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.

அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.

அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும்,

இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சமயாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.

எனவே வரும் கார்த்திகை தீப தின கிரிவலத்தை தவற விடாதீர்கள்.

Tags:    

Similar News