ஆன்மிக களஞ்சியம்

சஷ்டி விரத வழிமுறைகள்

Published On 2023-09-03 11:59 GMT   |   Update On 2023-09-03 11:59 GMT
  • இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பூசிக்க வேண்டும்.
  • ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

சஷ்டி விரத வழிமுறைகள்

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கிலபட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு ழுழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கந்தசஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரத்தை இருப்பது ஒருமுறை.

அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது.

எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து நாட்கடன்களை முடித்து திருநீறணிந்து முருகவேலை தியானித்து பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேலை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பூசிக்க வேண்டும்.

ஏழாம் நாள் காலை விதிப்படி பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

Tags:    

Similar News