ஆன்மிக களஞ்சியம்

மயிலை சிங்காரவேலர்

Published On 2023-10-25 12:33 GMT   |   Update On 2023-10-25 12:33 GMT
  • சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
  • இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.

ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.

இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும்

மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.

ஆண்டார்குப்பம்

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாகபொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது.

ஆதியில் ஆண்டிகள் நிறைந்த அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.

இங்கே காலையில் பாலனாக, நண்பகலில் வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன்.

"பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்" என்கிறார்கள்.

Tags:    

Similar News