ஆன்மிக களஞ்சியம்
குறி சொன்னால் பலிக்கும் புளியமரத்து மேடை
- இந்த மேடையில் அமர்ந்து குறி சொன்னால் பலிக்கும்.
- தெளிவில்லாத மனதில் தெளிவு பிறக்கும்.
பதினெட்டாம் படியைக்கடந்து சென்றால் இளைப்பாறும் வசதிக்காகப் பல மண்டபங்கள் இருக்கிறது.
புளியமரத்து மேடையும் அதில் ஒன்று.
இந்த மேடையில் அமர்ந்து குறிசொன்னால் பலிக்கும்.
தெளிவில்லாத மனதில் தெளிவு பிறக்கும்.
முடிவு ஆகாத பிரச்சினையை இங்கே கொண்டு வந்து அமரவைத்து பேசினால்,
முடிவு ஆகிவிடும் என்று கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்றதை சில பெரியவர்களின் வாய்மொழியாக அறியலாம்.
இடும்பன் கோவில்
இதையடுத்து இடும்பன் கோவில் அமைந்துள்ளது.
இடும்பனிடம் முறையிட்டு கை கால்கள் குடைச்சல், வாத வியாதிகள், பாதவியாதிகள், தீராத வியாதிகள், குழந்தைப்பிணி ஆகியவைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
காரணம் முருகனின் பூரண அருள் இடும்பனுக்கு உண்டு.