ஆன்மிக களஞ்சியம்

அனுமானின் அருளைப் பெறுவது எப்படி?

Published On 2023-09-13 18:43 IST   |   Update On 2023-09-13 18:43:00 IST
  • கண் மூடி தியானித்து “ராம், ராம்” என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
  • அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.

எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.

எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள் "ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெயராம்!" என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெயிப்பது நல்லது.

அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் மற்றும் புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.

அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.

இதுவும் கண்டிப்பான நிபந்தனை! வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம்.

தினசரி "ஸ்ரீராமஜெயம்" முடிந்தவரை எழுதலாம்.

அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.

கண் மூடி தியானித்து "ராம், ராம்" என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.

தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராமதரிசனம் பெற்றார்!

Tags:    

Similar News