ஆன்மிக களஞ்சியம்

அடிபட்ட காலுடன் இலங்கைக்கு விரைந்த அனுமன்

Published On 2023-09-13 17:10 IST   |   Update On 2023-09-13 17:10:00 IST
  • அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்து விடுகிறார்.
  • ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.

போரில் ராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மயக்கம் அடைகிறார்.

இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுமார் அனுப்பப்படுகிறார்.

இதை அறிந்த ராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான்.

அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார்.

ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

அன்றைய தினம் முடிவடையும் முன்பு மூலிகையினை கொண்டு வந்தால்தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்ற நிலை உள்ளது.

இதனால் அனுமார் பெரிய உருவம் எடுத்து, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து விடுகிறார்.

பின்னர் வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்து அடைகிறார்.

பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்கிறார்.

இதனால் ராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமாரை கட்டித் தழுவுகிறார்.

ராமர் அனுமாரைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவிக்கிறார்.

அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகிறார்.

அப்போது ராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியை தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமாரை நோக்கி அம்பினைத் தொடுக்கிறார்.

அம்பினில் ராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமார் அதை தடுக்காமல் இருக்கிறார்.

இதனால் அந்த அம்பு அனுமாரது காலைத் துளைக்கிறது.

உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம், உன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகக் கூறினார்.

இதைக் கேட்டதும் பரதன் தன் தவறை நினைத்து வருந்துகிறார்.

பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமார் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார்.

அனுமாரோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைந்தார்.

Tags:    

Similar News