ஆன்மிக களஞ்சியம்
12 ஆண்டுகள் கடைபிடிக்கப்படும் கார்த்திகை விரதம்
- இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
- இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும்.
தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
ப்ரமோதினி ஏகாதசி
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது.
இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும்.
பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.