என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

வியாபாரிகளின் தோழனான கூகலூர் ஆஞ்சநேயர்
- ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்
- அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை
கோபி அருகே கூகலூர் ஆஞ்சநேயரை மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவரை வழிபட்டு நற்பலனை பெறுகிறார்கள்.
ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார் அனுமன்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இங்கே வந்து, வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் நலம் பெறுவர் என்பதும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.
சுற்று வட்டாரத்தில் இருக்கும் வியாபாரிகள் பலர், தினமும் கடை திறப்புக்கு முன் கடைச்சாவியை இவரது திருவடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
அப்படி செய்தால் அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
Next Story






