என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

வடைமாலை சாத்துவது ஏன்?
- அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
- ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
நவக்கிரகங்களின் அங்கமாக விளங்கும் ராகுவும், சனியும் ஒரு முறை ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்து உள்ளனர்.
அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக உள்ளனர்.
புவியில் சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ராகுவுக்கான உளுந்தும், சனிக்கான எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு நடத்தலாம்.
அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
அதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
நோய் தீர்க்கும் துளசி தீர்த்தம்
ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
Next Story






