search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுந்தர வடிவ முருகன் தரிசனம்
    X

    சுந்தர வடிவ முருகன் தரிசனம்

    • முருகனின் திருவுருவத்தில் லயித்து அந்த முருகனின் சுந்தர வடிவத்தை பார்த்துப் பூரிக்கலாம்.
    • இந்த மூன்று கல்லும் மூன்று திருடர்கள். திருடர்களை முருகன் கல்லாக சபித்திருக்கிறார்.

    பஞ்ச விருட்சத்தை வணங்கி விட்டு கொடி கம்பத்தை தரிசித்து முருகனின் தரிசனத்திற்காக சன்னிதிக்கு செல்ல வேண்டும்.

    முருகனின் திருவுருவத்தில் லயித்து அந்த முருகனின் சுந்தர வடிவத்தை பார்த்துப் பூரிக்கலாம்.

    கொங்கு நாட்டில் இந்த மருதமலை முருகனைத்தவிர வேறு எந்த முருக தரிசனமும் இந்த வசீகரத் தன்மையைக் கொடுக்க முடியாது என்றே கூறலாம்.

    கள்வர் கல்சிலை

    பதினெட்டு படியிலிருந்து நேர் வட கிழக்காக உயரே பார்த்தால் மூன்று கல் வடகிழக்கே மலைச்சாரலில் மாறுபட்ட நிறத்துடன் தெரியும்.

    இந்த மூன்று கல்லும் மூன்று திருடர்கள். திருடர்களை முருகன் கல்லாக சபித்திருக்கிறார்.

    முன்னொரு காலத்தில் மருதமலை முருகனுக்கு ஆலயம் அமைத்துத் திருவிழா நடைபெறும் காலத்தில்

    முருகனுக்கு உண்டியலில் பொன்னும் பொருளும் காணிக்கைகளாக விழுந்து கோவிலில் பூஜைக்காக

    வெண்கல, வெள்ளி சாமான்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்த மூவர் நள்ளிரவில் முருகனின் உண்டியலை உடைத்தும்

    பூஜை சாமான்களையும் திருடிக்கொண்டும் வடப்புற மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    அவர்களின் முன் முருகன் குதிரையின் மீது அமர்ந்தபடி வேடனைப்போல் சென்று அவர்களை கல்லாக்கி விட்டார்.

    Next Story
    ×