search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சாஸ்தா தரிசனம்
    X

    சாஸ்தா தரிசனம்

    • மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.
    • ஆர்ய சாஸ்தா குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள்.

    'தர்மஸ்ய சாஸ்னம் கரோதி இதி தர்ம சாஸ்தா' தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக அய்யப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

    மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள்.

    அவரே துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார்.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும்.

    அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.

    அவை- ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸதா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

    ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா - புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு.

    அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே.

    இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

    கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், எம பயம் விலகும்.

    பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிலில் காட்சி தருபவர்.

    ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர்.

    நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே 'தந்வந்த்ரி சாஸ்தா' என்றும் அழைப்பர்.

    தகழி, த்ருப்ரயார் ராம சேத்திரம் முதலான பல தலங்களில் இவர் காட்சி தருகிறார்.

    சம்மோஹன சாஸ்தா சகலவிதமான சவுக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

    ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு 'ப்ரபா' என்ற மனைவியும், 'ஸத்யகன்' என்ற மகனும் உண்டு.

    இவர் குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    திருகுன்னபுழை எனும் சேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம்.

    இவரது திருக்கோவிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோவில் என்பார்கள்.

    பகவான் வேட்டைக்காரனாக காட்சி தரும் கோலம் - கிராம சாஸ்தா திருக்கோலமாகும்.

    எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடிவில் சாஸ்தாவைக் காணலாம்.

    புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா - வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது...

    Next Story
    ×