என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ராமனை சந்தித்த அனுமன்

- இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள்.
- அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.
ராமனும், லக்குவனும் கிஷ்கிந்தை வருவதை அறிந்த சுக்ரீவனும், அனுமனும் வானரப் படைகளுடன் ராமனைச் சந்தித்தார்கள்.
தான் வந்த காரணமும் சீதையை ராவணன் கடத்தி சென்றதையும் ராமன் விளக்கினார்.
இலங்கையில் தான் சீதை இருக்கிறாள் என்பதை அறிந்த அனுமன் யாரை இலங்கைக்கு அனுப்பி சீதையைக் கண்டுபிடிப்பது என யோசனையில் மூழ்கினார்.
கடலைத் தாண்டி இலங்கைக்குப் போய்த் திரும்பி வரும் திறமை யாருக்கு உண்டு என்பதை வானர வீரர்களும் யோசித்தார்கள்.
நீலன், அங்கதன், சாம்பவான் போன்றோர் தங்கள் இயலாமையைக் கூறி வருந்தினர்.
இலங்கைக்குப் போகும் வல்லமை படைத்தவன் அனுமனே என முடிவு செய்தார்கள். இலங்கைக்குப் புறப்பட்டார் அனுமன்.
அனுமன் புயல் காற்றைப் போல ஆகாயத்தில் போய்க் கொண்டிருந்தார்.
அவரை எதிர்க்க வந்த சரசை என்னும் அரக்கியை வென்று மேலும் பறந்து சென்றார்.
எமதர்மன் போல அங்காரதாரை என்ற ராட்சசி குறுக்கே நின்றாள். அவளையும் கொன்றார்.
மாலை நேரம் அனுமன் இலங்கையில் வந்து இறங்கினார்.