என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிரஞ்சீவி அனுமன் அவதரித்த கதை
- சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
- ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.
கேசரி என்ற சிவபக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.
அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.
அதனால் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார்.
சிவபெருமான் கேசரி முன் காட்சித் தந்தார். அவரிடம் கேசரி தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்றார்.
அதற்கு சிவபெருமான் "பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள் பிறக்கவே பாக்கியம் உள்ளது.
அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாக திகழ்வான் எனக் கூறி விட்டு மறைந்து போனார்.
சிவபெருமான் அருளியபடி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர்.
அஞ்சனைக்கு திருமண வயது வந்ததும் அவளை வானர வீரன் ஒருவனுக்கு கேசரி மணமுடித்து வைத்தார்.
ஆஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.
இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி திருவேங்கட மலைக்கு கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி வந்தால் ஆண்மகன் பிறப்பான் எனக் கூறினாள்.






