search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அய்யப்பனும் ஆறு ஆதார சக்கரங்களும்
    X

    அய்யப்பனும் ஆறு ஆதார சக்கரங்களும்

    • சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.
    • சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்.

    பகவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல் குழி தீர்த்தமாக-கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளி வருகிறது.

    சபரிமலையின் முக்கிய தீர்த்தமாக இது விளங்குகிறது.

    சபரி மலை யாத்திரையின் போது, கட்டு நிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்து விட்டு கிளம்புகிறோம்.

    இது நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அய்யபனின் பரிவார தெய்வங்களுக்காக உடைப்பது.

    அய்யப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர்.

    மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது.

    கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகர விளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்.

    சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்,

    ஆலயத்தின் பூஜை முறைகளையும், யாத்தரைக்கான வழிகாட்டுதலையும் உருவாக்கி கொடுத்தவர் அகத்திய மகரிஷி.

    மணிகண்ட அவதார காலத்தில், பவான் பூதநாதனால் தன் வளர்ப்புத் தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே 'ஸ்ரீ பூதநாத கீதை'

    சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.

    அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும் மறு கால் மடித்தபடியும் இருக்கும்.

    மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

    நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களைக் குறிக்கும் ஆறு சாஸ்தா சேத்திரங்கள் உண்டு.

    அவை..

    மூலாதாரம்- சொரிமுத்தய்யன் கோவில், ஸ்வாதிஷ்டாவனம் - அச்சன் கோவில், மணிபூரகம்- ஆர்யங்காவு, அனாஹதம்- குளத்துபுழை, அனாஹதம்- குளத்துபுஜை, விசுத்தி- எருமேலி, அக்ஞை- சபரிமலை.

    Next Story
    ×