search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்
    X

    சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன.

    ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக கேலக்ஸி X ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் இதன் ப்ரோடோடைப் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (CES 2018) அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    ப்ரோடோடைப் மாடலில் மூன்று OLED பேனல்கள் ஒவ்வொன்றும் 3.5 இன்ச் அளவில் வழங்கப்படும். இவை ஒன்றிணைந்து  7 இன்ச் அளவில் ஸ்மார்ட்போன் போன்றும், மூன்றாவது பேனல் வெளிப்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் கேலக்ஸி நோட் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி X வடிவமைப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மடிக்கும் தன்மைகளில் சாம்சங் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இறுதி வடிவமைப்பு ஜூன் மாதத்திற்குள் உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் கேலக்ஸி எஸ்8, எஸ்9 போன்று இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் மடிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என்றும் இது லிமிட்டெட் எடிஷன் போன்று குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×