search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி
    X

    ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

    டிராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர். ஆரோன் பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார்.



    அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.
    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் இறங்கினர். 

    இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 174 ஆக இருக்கும்போது ஜேசன் ராய் 83 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 66 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக ஆடினார். இறுதியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஹேல்ஸ் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அத்துடன் தொடரை 4-0 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாசார்பில் ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvsENG
    Next Story
    ×