search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    ஐபிஎல் 2018- 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP
    ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ரகானே 9 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    இதையடுத்து, 159 ரன்களை இலக்காக கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர்.

    ஆனால் ராஜஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் அணியினர் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
    லோகேஷ் ராகுல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். மற்றவர்கள் அனைவரும் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோற்றது. ராகுல் 95 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

    ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், சோதி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது.
     #IPL2018 #RRvKXIP
    Next Story
    ×