search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா வரலாற்று சாதனை
    X

    லா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா வரலாற்று சாதனை

    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா 39 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போட்டு வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. #laliga #Barcelona
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட் வாலன்சியோ போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    கடந்த 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்த காரணத்தால் இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த பார்சிலோனா தற்போது இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது.



    பார்சிலோனா இந்த சீசனில் இதுவரை 31 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வந்த நிலையில் நேற்று வாலன்சியா அணியை எதிர்கொண்டது. இதில் சுவாரஸ், உமிடிடி ஆகியோர் கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா வரலாற்றில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அணி என்ற வரலாற்றை படைத்துள்ளது. இந்த சீசனில் 32 போட்டிகளிலும், கடந்த சீசனில் கடைசி 7 போட்டிகளிலும் பார்சிலோனா தோல்வியை சந்தித்தது கிடையாது.



    பார்சிலோனா 32 போட்டிகள் முடிவில் 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அட்லெடிகோ டி மாட்ரிட் 31 போட்டியிலும் 68 புள்ளிகளுடனும், வாலன்சியா 32 போட்டிகளிலும் 65 புள்ளிகளுடனும், ரியல் மாட்ரிட் 31 போட்டிகளில் 64 புள்ளிகளுடன் முறையே 2-வது இடம் முடில் 4-வது இடம் வரை பிடித்துள்ளது.
    Next Story
    ×