என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 153/5 - மழையால் ஆட்டம் நிறுத்தம்
    X

    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 153/5 - மழையால் ஆட்டம் நிறுத்தம்

    ஜெய்ப்பூரில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ள போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. #IPL2018 #RRvsDD
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 11 ஆக இருந்தபோது ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார்.



    அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும், ரகானேவும் நிதானமாக ஆடினர். இதனால் இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 90 ஆக இருந்தபோது, சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 37 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோஸ் பட்லர் இறங்கினார். பொறுப்பாக ஆடிய ரகானே 45 ரன்களில் அவுட்டானார். பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.



    ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும், கவுதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    டெல்லி டேர் டெவில்ஸ் சார்பில் ஷபாஸ் நதிம் 2 விக்கெட்டும், போல்ட், ஷமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
    Next Story
    ×