search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2-வது ஆட்டம்- டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X

    ஐபிஎல் 2-வது ஆட்டம்- டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    லோகேஷ் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டதால் டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #KXIPvDD
    ஐபிஎல் 11-வது சீசனின் 2-வது ஆட்டம் சண்டிகரில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழக்க, கவுதம் காம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 13 ரன்னில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த காம்பீர் 42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதன்பின் வந்த கிறிஸ் மோரிஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 27 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 167 ரன்னகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 14 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 2.5 ஓவரில் 50 ரன்னைத்தொட்டது.

    அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய அகர்வால் 5 பந்தில் 1 சிக்சருடன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த யுவராஜ் சிங் 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.



    இருவரின் சிறப்பான அரைசதங்களால் மற்ற வீரர்கள் நிதானமாக விளையாடினார்கள். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×