search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா
    X

    ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா

    பிரபலமான டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கூறியுள்ளார். #IPL2018 #RCB
    இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. கடந்த வருடம் சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 கிரிக்கெட் என்றாலே அது பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபில் கிரிக்கெட் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நெஹ்ரா கூறுகையில் ‘‘ஒருபேட்ஸ்மேன் ஒரு போட்டியில் ஐந்து சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கூட, 40 பந்தில் 120 அல்லது 50 பந்தில் 130 ரன்கள் எடுத்தாலும் அது பெரிதாக காட்டப்படுகிறது. அதேநேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்பும் உள்ளது. நான்கு ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், அதுகுறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளுவதில்லை. அதே சமயம் நான்கு ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தால், அது பெரிதாக விமர்சிக்கப்படுகிறது.



    கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களும் சரி சமமான பணிகளை செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பெங்களூர் மற்றும் மும்பை மைதானத்தில் பந்து வீச்சாளர்கள் பணி முக்கியமானது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் பணி முக்கியமானது. டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×