search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    600-வது கோல் அடித்தார், மெஸ்சி
    X

    600-வது கோல் அடித்தார், மெஸ்சி

    லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்ததன் மூலம் 600 கோல்களை எட்டியுள்ளார்.
    பார்சிலோனா:

    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26-வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார்.



    தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600-வது கோல் இதுவாகும். அவர் இதுவரை பார்சிலோனா கிளப்புக்காக 539 கோல்களும், அர்ஜென்டினா அணிக்காக 61 கோல்களும் அடித்துள்ளார்.
    Next Story
    ×