என் மலர்
பெண்கள் உலகம்

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வும்
முகத்தில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. அதற்கான தீர்வுகளை தேடி பெண்கள் அலுத்துப் போய்விடுகிறார்கள். முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.
முகம்தான் அழகுக்கு பிரதானமாகும். அழகான, அமைதியான முகமே சிறந்த அழகை எடுத்துக் காட்டும். ஆனால் அந்த முகத்தில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. அதற்கான தீர்வுகளை தேடி பெண்கள் அலுத்துப் போய்விடுகிறார்கள். இப்படி முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வையும் கூறுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
முகம் என்பது எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் அதிகப்படியான மேக்கப்பை போடுகிறார்கள். இதனால் நமது சருமம் அதிகமாக பாதிப்படைந்து சோர்வடைகிறது. இதுபோன்றவர்களது முகத்தை மேக்கப் இன்றி பார்க்கவே முடியாத அளவிற்கு மோசமடைவது பலரும் அறிந்த உண்மை.
எனவே, மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால் சருமத்தை பாதிக்காத மேக்கப் சாதனங்களை வாங்கி அதில் கூறப்பட்டுள்ள நேரத்திற்கு மட்டும் பயன்படுத்தவும். இரவில் தூங்கச் செல்லும் போது முகத்தை நன்கு சுத்தப்படுத்திவிட்டு தூங்குவது சருமத்திற்கு நல்லது.
மேலும், அதிகமாக மேக்கப் போட்டதால் சருமம் இழந்த ஈரப்பதத்தைப் பெற தேங்காய் எண்ணெயை முகம் முழுவதும் மசாஜ் செய்துவிட்டு தூங்குவது சருமத்திற்கும் நல்லது.
அடுத்ததாக முகப்பரு. இது டீன் ஏஜ் பெண்களின் பெரும் கவலை. பொதுவாக முகப்பரு என்பது உடல் தன்மையைப் பொருத்து ஏற்படுவது. இதனை சமாளிக்க பல வழிகள் உள்ளன.
எலும்பிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இரவில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும்.
பருக்கள் வந்ததும் கை விரல் நகங்களால் பருவை கிள்ளவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. விரல்களால் கிள்ளும் போதுதான் முகப்பரு வந்த இடத்தில் அடையாளம் விழுகிறது. மேலும் சருமத்தின் பல இடங்களுக்கும் பரவுகிறது.

Next Story