search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு
    X

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.
    கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும். இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.

    பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று மயிலத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

    Next Story
    ×