search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்
    X

    மீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

    இம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.

    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.


    அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: carwale
    Next Story
    ×