search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    • உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
    • மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.

    இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

    மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

    மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.

    அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார்.
    • எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் இந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றார்.

    லாவோஸ் நாட்டை சேர்ந்தவர் செங்சைபன். 46 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அமெரிக்காவில் குடியேறி உள்ள செங்சைபன் கடந்த சில நாட்களுக்கு ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு 1.3 பில்லியன் டாலர்கள் பரிசு விழுந்துள்ளது.

    இந்திய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புடைய இந்த பரிசு தொகையை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த பணத்தை புற்றுநோய் சிகிச்சை பெற பயன்படுத்த இருப்பதாக செங்சைபன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், இப்போது நான் என் குடும்பத்தை ஆசீர்வதித்து எனக்காக ஒரு நல்ல மருத்துவரை பணியமர்த்த முடியும். என் வாழ்க்கை மாறிவிட்டது. எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் இந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றார்.

    • ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
    • கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

    இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
    • நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார்.

    பிரபல பாடகியான டெய்லர் ஷிப்ட் பாப் பாடல்கள் பாடுவதில் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். தனித்துவமான இசை ஆல்பங்களை வெளியிட்டு வரும் இவர் நாடு முழுவதும் பயணித்து மேடை அமைத்து பாடல்களையும் பாடி வருகிறார். பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரில் மேடை கச்சேரியில் பாடல்கள் பாடினார்.

    அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார். பின்னர் அவருக்கு இசைநிகழ்ச்சிகளில் அணிந்து கொண்ட தொப்பி ஒன்றை பரிசாக கொடுத்தார்.

    இந்த நிகழ்வு அப்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுப்பொருளானது. இந்தநிலையில் டெய்லர் ஷிப்டிடம் நினைவு பரிசு பெற்ற 9 வயது சிறுமி நோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளவாசிகள் இணையத்தில் பரவ செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.
    • தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார்.

    இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.


    அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சோம்நாத் அறிவிப்பு.
    • சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு சிசிச்சை.

    ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்படுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

    சந்தியான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்து 5ம் நாளிலேயே சோம்நாத் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மகேந்திரகிரியில் நடைபெற்ற இஸ்ரோ மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், சோம்நாத் பங்கேற்றிருந்தார்.

    • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
    • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • இந்தியாவில் 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
    • பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த நாடான இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிறு புற்றுநோய் ஆகிய 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.

    நம் நாட்டில் 9 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களில் 68 பேரில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    நம் நாட்டில் உத்தரபிரதேசத்தில்தான் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 2 லட்சம் பேருக்கு இந்த நோய் ஏற்பட்டது.

    இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேரை புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரும், பீகாரில் ஒரு லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் பாதிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த வரிசை மாறுகிறது.

    அதாவது இந்த பட்டியலில் கேரளாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 1 லட்சம் பேரில் 135 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 1 லட்சம் பேரில் 122 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.

    இந்த பட்டியலில் டெல்லி (103 பேர்) 3-வது இடத்திலும், கர்நாடகம் (102 பேர்) 4-வது இடத்திலும், கோவா (97 பேர்) 6-வது இடத்திலும், இமாசலபிரதேசம் (92 பேர்) 7-வது இடத்திலும், உத்தரகாண்ட் (91 பேர்) 8-வது இடத்திலும், அசாம் (90) பேர்) 9-வது இடத்திலும், பஞ்சாப் (89 பேர்) 10-வது இடத்திலும் உள்ளன.

    ×