என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே
    • தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை.

    ஆர்.ஜே.வாக பணியாற்றி, பின் யூடியூப் சேனல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் ஷா ரா. 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் மற்றும் மீசைய முறுக்கு ஆகிய திரைப்படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கோமாளி, நான் சிரித்தால், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான தணல் படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்,

    "4 மணிக்கு தூக்கம் வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். இப்போது படம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு ஃபாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்) இருக்கிறார்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்துதான் சம்பளம் பேசுகிறார்கள். இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே. எனக்கு கூந்தல் கிடையாது, மொழு மொழு கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி, அதுவும் நரைத்து போயுள்ளது.

    நெஞ்சில் முழுவதும் முடி. எனக்கு ரீல்ஸ் பண்ணவும் பிடிக்காது. என்ன செய்து இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பது என்று தெரியாமல், தூக்கம் வராமல், தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை. இது என் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

    ஃபாலோவர்ஸை ஏற்றுவதற்கு என்னிடம் கவர்ச்சி இல்லையே. நான் என்ன செய்வேன், எதாவது ஐடியா இருந்தால் கீழே (comment-ல்) சொல்லுங்கள்". என பேசியுள்ளார்.

    இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் திறமையான நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

    • ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
    • சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தார்.

    1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை பிரதியுஷா அறிமுகமானார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.

    பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் பிரத்யுஷா நடித்துள்ளார்.

    சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெயி மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைக்க பிரத்யுஷா உயிரிழந்தார்.

    சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.

    இதனால் விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அதன்படி 4 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தை கமல் தயாரிக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
    • இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உரவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான "ஆடினே இருப்பேன்" வெளியானது. இந்தப் படத்தில் அஜித் குமார் ரேசிங், பென்குயின் என சமீபத்திய டிரெண்டிங் சம்பவங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்துள்ளது.

    • தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
    • இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

    இப்படத்திற்கு பாக்கெட் நாவல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இளையராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிருந்தார் அபிஷன் ஜீவிந்த்.
    • படம் 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது

    அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் 'வித் லவ்'. இபட்டதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மதனும், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தும் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார்.
    • கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

    நடிகர் நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் தி பாரடைஸ். 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது.

    இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது.

    1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். முன்னதாக மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என்று பின்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் ஆயாசீர் ஃபர்ஸ்ட் சிங்கிளான AayaSher பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • சேயோன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி இருக்கும் புதிய வீடியோ படம் கிராம பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது. ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
    • இந்தப் படத்திற்கு ப்ரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.

    2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர். திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில், தாஷமக்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "Rap Battle" வெளியாகி உள்ளது.

    ப்ரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ஹிரிஷ் கல்யாண் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    • அவருக்கு 2025 ஆம் ஆண்டு 90 வயது நிறைவடைந்தது.
    • மருத்துவர்கள் இன்னும் மருத்துவ அறிக்கையை வெளியிடவில்லை.

    பாலிவுட்டின் மூத்த திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2025 ஆம் ஆண்டு 90 வயது நிறைவடைந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    சலீமின் மூத்த மகன் சல்மான் கானும், மருமகன் அதுல் அக்னிஹோத்ரியும் இன்று காலை மருத்துவமனைக்கு வெளியே காணப்பட்டனர். மூத்த திரைக்கதை எழுத்தாளர் கடைசியாக வாக்களிப்பதற்காக நகரத்தில் காணப்பட்டார். இது குறித்து மருத்துவர்கள் இன்னும் மருத்துவ அறிக்கையை வெளியிடவில்லை.

    • உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து 'ஸ்லிம்' ஆகியுள்ளார்.
    • தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான 'பெண் சிங்கம்' படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார்.

    90 கிட்ஸ்களின் விருப்பமான நடிகைகளில் முக்கியமானவர் ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் 'அழகிய லைலா...' பாடலில் ரம்பாவின் உடை பறக்கும் ஆட்டத்தை யாருமே மறக்க முடியாது. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரம்பாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

    'தொடை அழகி' என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ரம்பா, 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரம்பா, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது விரைவில் வெள்ளித்திரைக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து 'ஸ்லிம்' ஆகியுள்ளார். புதிய கதைகள் கேட்டு வரும் ரம்பா ஓரிரு கதைகளை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான 'பெண் சிங்கம்' படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார். இதன்மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவுள்ளார் 49 வயதாகும் ரம்பா. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில் இருவரின் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை தெரியாவிட்டாலும், பலரும் இதை வைரல் செய்து வருகின்றனர்.

    அந்தப் பத்திரிகையின்படி, இவர்களது திருமணம் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    "எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் பிப்ரவரி 26 அன்று ஒரு சிறிய விழாவில் ராஷ்மிகாவும் நானும் இணைகிறோம். எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் எளிமையாக நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  

    ×