என் மலர்
நீங்கள் தேடியது "Pratyusha"
- ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
- சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தார்.
1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை பிரதியுஷா அறிமுகமானார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் பிரத்யுஷா நடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெயி மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைக்க பிரத்யுஷா உயிரிழந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.
இதனால் விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி 4 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி பேஷன் டிசைனராக இருந்து வந்தவர் பிரதியுஷா.
- தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரதியுஷா கேரிமெல்லா குளியலறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்து வந்தவர் பிரதியுஷா கேரிமெல்லா. தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் வசித்து வந்த அவர், குளியலறையில் நேற்று மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அந்த அறையில் கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கொண்ட பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனை அவர் சுவாசித்து இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பிரதியுஷா மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என கூறியுள்ள போலீசார், எனினும் விசாரணை நடந்து வருகிறது. அதன்பின்னரே பிற விசயங்கள் தெரியவரும் என தெரிவித்து உள்ளனர்.

பிரதியுஷா
அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்து முடித்துள்ள பிரதியுஷா, ஐதராபாத்தில் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட தொடங்கினார். கடந்த 2013ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனராக செயல்பட தொடங்கிய அவர் தொடர்ந்து முன்னேற்ற வழியில் நடைபோட்டார். தெலுங்கு திரையுலகம் மற்றும் சில பாலிவுட் படங்களிலும் பல்வேறு பிரபல திரை நட்சத்திரங்களுக்கு அவர் பேஷன் டிசைனராக இருந்து வந்துள்ளார். இவர் ஜாக்குலின், மாதுரி தீட்சித், கஜோல், பிரியங்காசோப்ரா, வித்யாபாலன், ரவீனாடாண்டன், ஸ்ருதிஹாசன், ரகுல்ப்ரீத்சிங் உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகைகளுக்கு டிசைனராக இருந்துள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் மர்மான முறையில் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






