என் மலர்
- டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
- அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.
இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
- தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.
தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.
இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'குற்றம் கடிதல் 2 படத்தின்' படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.
நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.
- ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.
- இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
- இனிவரும் நாட்களில் , ‘D54’ படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்ட படக்குழு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், 'D54' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதால் இனிவரும் நாட்களில் , 'D54' படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.
ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.
பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.
நடிகர்கள்
அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.
சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.
இயக்கம்
மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.
இசை
ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.
ஒளிப்பதிவு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.
ரேட்டிங்- 2/5
- கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
- திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும்.
தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொன்னவர், இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர், தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை இயக்கி வருகிறார். இவர் ஆரம்பத்தில் தன் படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை மணந்துகொண்டார்.
சமீபத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனுடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதாக கூறப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,''திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும். சுற்றியுள்ள அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். 'நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டிருப்பேன்' என்று பிதற்றுவீர்கள். அதுபோன்ற நேரங்களில் அமைதியாக இருங்கள். சில காலத்தில் பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம், செல்வராகவனின் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் அவர் சொல்லியிருக்கிறார் என்று பலரும் பின்னூட்டம் செய்து வருகிறார்கள்.
- ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி.
- கமல்ஹாசன், மம்முட்டி, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்துள்ளார்.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி. (52). இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார்.
தமிழிலும் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட்ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளியான முதல் சீதனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் ராமசந்திர ராவ் முன்னிலையில் நடிகை ஆம்னி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆர்டிஸ்ட் சோபா லதாவும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
- பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.
அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 70 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ரா வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் வோட்டிங் அடிப்படையில் FJ மற்றும் ஆதிரை கடைசி இடங்களில் உள்ளதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
- ஹாப்பி ராஜ் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
- ஹாப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.








