search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் அல்காரஸ்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் அல்காரஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    Next Story
    ×