என் மலர்

  தொழில்நுட்பம்

  சீர் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்
  X

  சீர் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சீர் செய்யப்பட்ட வெர்ஷன் புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து விற்பனையை தள்ளிவைத்தது. ஸ்மார்ட்போனை மடிக்கும் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை கண்டறியப்பட்டு விட்டதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஏற்கனவே தகவல் வழங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டு விவரம் வெளியாகி இருக்கிறது.

  அதன்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தென்கொரியாவில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில் புதிய கேலக்ஸி ஃபோல்டு அமெரிக்காவில் மூன்று நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு மாடலில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய அந்நிறுவனம் ஸ்மார்ட்போன் ஃபிரேம் அடியில் பாதுகாப்பான பிளாஸ்டிக் கோட்டிங் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  கேலக்ஸி ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கீழ் பகுதியில் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இரு டிஸ்ப்ளேக்களின் இடையில் தூசு போன்றவை நுழையாது. இதனால் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சாம்சங் நிறுவனம் தனது கேல்கஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அந்நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×