search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி M33 5ஜி
    X
    சாம்சங் கேலக்ஸி M33 5ஜி

    108MP பிரைமரி கேமராவுடன் புது சாம்சங் போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி M32 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஒ 120Hz FHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், லிக்விட் கூலிங் வசதி, அதிகபட்சம் 8GB ரேம், 8GB விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த பிரிவில் ஆட்டோ டேட்டா ஸ்விட்சிங் வசதி கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது என சாம்சங் அறிவித்து உள்ளது. இந்த வசதி கொண்டு இரு சிம்களில் ஒன்று நெட்வொர்க் பகுதிக்கு வெளியில் இருந்தால், தானாக மற்றொரு சிம் மூலம் அழைப்புகளை மேற்கொள்வது, டேட்டா பயன்படுத்த வழி செய்யும். 

     சாம்சங் கேலக்ஸி M33 5ஜி

    சாம்சங் கேலக்ஸி M33 5ஜி அம்சங்கள்:

    - 6.7 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர்
    - மாலி-G68 MC4 GPU
    - 6GB / 8GB LPDDR4x ரேம்
    - 128GB இண்டர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 
    - 108MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4 
    - 32MP செல்ஃபி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - சாம்சங் பே 
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
    - 5000mAh பேட்டரி
    - 25W ஃபாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் டீப் ஓஷன் புளூ மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 499 என்றும் 8GB + 128GB விலை ரூ. 28 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏப்ரல் 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
    Next Story
    ×