search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பிளே ஸ்டோர்
    X
    பிளே ஸ்டோர்

    ஆபத்தான செயலிகள்- கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கை

    கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து கூகுள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.

    ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

    ஷார்க்பாட்ஸ் எனப்படும் இந்த மால்வேர் பயனர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது. அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த மால்வேர்களை நீக்கியுள்ளதாக தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    பிளேஸ்டோரில் இருந்து க்யூஆர் ஸ்கேனர், வெதர் செயலி, பிரேயர் செயலி என நிறைய செயலிகளை நீக்கியுள்ளோம். இதில் தகவலை திருடும் மால்வேர்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இந்த செயலிகளை ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளதும் தெரியவந்தது.

    கூகுள் பிளேயில் உள்ள அனைத்து செயலிகளும் கூகுளின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
    Next Story
    ×