என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஒப்போ ஃபைன்ட் எக்ஸ் 5
ஒப்பற்ற அம்சங்களுடன் வந்துள்ள ஒப்போ ஃபைன்ட் X5 மற்றும் ஒப்போ ஃபைன்ட் X5 ப்ரோ
இந்த இரு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேஷன், மரிசிலிக்கான் எக்ஸ் சிப் ஆகியவற்றை பெற்றுள்ளன.
ஒப்போ நிறுவனம் ஃபைன்ட் எக்ஸ்5 மற்றும் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்5 போனில் 6.55-inch OLED டிஸ்பிளே, ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன், 120Hz ரெஃபிரேஷ்ஷுடன் இடம்பெற்றுள்ளது. இதன்புறம் மேட் கிளாஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனில் Snapdragon 888 chipset, கலர் ஓ.எஸ் 12.1-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.8 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள 6nm neural processing unit (NPU) மற்றும் image signal processor (ISP) ஆகியவற்றை இணைத்த MariSilicon X chip மற்றும் multi-tier memory architecture இதன் புகைப்பட தரத்தை மேம்படுத்துகிறது.
மேலும் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு Sony IMX615 32 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4,800mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC வேகமான ஒயர்ட் சார்ஜிங், 30W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.84,500-ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைன்ட் எக்ஸ் 5 ப்ரோ போனில் 6.70-inch 10-bit QHD+ (1,440x3,216 pixels) AMOLED டிஸ்பிளே, குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide (LTPO) தொழில்நுட்பம், 120Hz adaptive ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போன் HDR10+ சப்போர்ட்டையும் பெற்றுள்ளது.
இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.7 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் S5K3M5 சென்சார், f/2.4 அப்பார்ச்சர் கொண்ட டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரைமரி சென்சாரில் 5 ஆக்ஸிஸ் ஓ.ஐ.எஸ் மற்றும் 13 சேனல் ஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
எக்ஸ்5 போன் போலவே இதிலும் புகைப்படத்தை மேம்படுத்தும் மரிசிலிக்கான் எக்ஸ் சிப் தரப்பட்டுள்ளது.
இந்த போனில் f/2.4 லென்ஸ், 32 மெகாபிக்ஸல் Sony IMX709 செல்ஃபி சென்சார் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த போனில் யூடியூப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஏர் கெஸ்டர் என்ற அம்சமும் தரப்பட்டுள்ளது.
இந்த போனிலும் 5000mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC, 50W AirVOOC, and 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,09,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய இரண்டு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேசனை பெற்றுள்ளன.
இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகமாகும் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
Next Story






