என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் போன்கள்
    X
    ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் போன்கள்

    ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள்..

    ஹெச்.டி.எப்.சி கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ 5ஜி, ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்.சி.டி பேனல், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் அமைந்துள்ளது. மேலும் இந்த போனில் octa-core Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 12, ரியல்மி யு.ஐ. 3.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் f1.79 அபார்சர் லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் ஆகியவை அமைந்துள்ளன.

    செல்ஃபி மற்றும் வீடியோ சாட்டுகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா முன்பகுதியில் அமைந்துள்ளது.

    மேலும் இந்த போனில் 5.2 ப்ளுடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் அமைந்துள்ள கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி போன்கள்

    ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, Super AMOLED டிஸ்பிளே, 20:9 aspect ratio, 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவிற்கு 2.5டி கார்னிங் கொரிலா கிளாஸ் 5 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் டச் சாம்பிளிங் ரேட் 180Hz -ஆக இருக்கிறது.

    இந்த போன் octa-core MediaTek Dimensity 920 SoC, Mali-G68 MC4 GPU-ல் இயங்குகிறது.

    இந்த போனில் 3 பிக்பக்க கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில்  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 சென்சார், f/2.2 அபார்ச்சரில், 8 மெகாபிக்ஸல் சோனி IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா-ஒயிட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் தரப்பட்டுள்ளன.

    இந்த போனின் பிரைமரி கேமரா சென்சாரில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள நாய்ஸ் ரெடக்‌ஷன் இன்ஜின் 3.0 புகைப்படங்களில் ஏற்படும் நாய்ஸ்களை குறைக்கூடியது.

    முன்பக்க கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல், f/2.4 அபார்ச்சர் லென்ஸ் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த போனில் ஆக்ஸெலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் மூலம் இதய துடிப்பை அளவிட முடியும். சாதாரணமாக நாம் இருக்கும்போது உள்ள இதய துடிப்பு, உடற்பயிற்சி, ஓய்வு, கவலை, முழு ஆற்றல், தூங்காமல் இருக்கும்போது நம் இதயதுடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் இதில் அறிய முடியும்.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.26,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.28,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச்.டி.எப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    Next Story
    ×