என் மலர்
தொழில்நுட்பம்

ஒப்போ ஏ15
ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகை அறிவிப்பு
ஒப்போ நிறுவனம் தனது ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஜியோவுடன் இணைந்து சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஏ15 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகமானது. இதனிடையே ஒப்போ ஏ15 விலை குறைக்கப்பட்டு பின், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டது.
தற்போது ஜியோவுடன் இணைந்து ஒப்போ நிறுவனம் தனது ஏ15 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின்படி ஒப்போ ஏ15 (3 ஜிபி+32 ஜிபி) மாடல் விலை ரூ. 999 குறைக்கப்பட்டு ரூ. 9,991 என மாறி இருக்கிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஜியோ பலன்கள் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ15 மாடலில் 6.52 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கைரேகை சென்சார், டூயல் சிம் 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓ.எஸ். 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.
Next Story






