என் மலர்
தொழில்நுட்பம்

பிஎஸ்என்எல்
டேட்டா ரோல்-ஓவர், அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு
பிஎஸ்என்எல் ரூ. 199 விலை போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகையை ரூ. 199 விலையில் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் முன்னதாக இந்த சலுகையில் 300 நிமிடங்கள் ஆப்-நெட் அழைப்புகள் வழங்கப்பட்டு இருந்தது.
புதிய மாற்றம் இந்த சலுகை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அழைப்புகளை வழங்குகிறது. இதில் பிஎஸ்என்எல் மட்டுமின்றி இதர நிறுவன எண்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தவிர இந்த சலுகையில் 25 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் அதிகபட்சம் 75 ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 199 புதிய பலன்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி அமலானது. இதுபற்றிய தகவல் பிஎஸ்என்எல் சென்னை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மாற்றம் சென்னை மட்டுமின்று நாடு முழுக்க அமலாகி இருக்கிறது. இந்த சலுகையில் மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.
Next Story






