search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட் ஹெல்மெட்
    X
    ஸ்மார்ட் ஹெல்மெட்

    ரூ. 6 லட்சம் பட்ஜெட்டில் கொரோனாவைரஸ் ஸ்கிரீனிங் செய்யும் மும்பை

    துபாய், இத்தாலி, சீனாவை தொடர்ந்து மும்பையில் அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட் மூலம் கொரோனாவைரஸ் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.


    மும்பையில் கொரோனாவைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலேயே அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்ட பகுதிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய மும்பையில் அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

    இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்களில் போர்டபிள் தெர்மோஸ்கேனர்கள் (உடல் வெப்பத்தை கண்டறியும் சாதனம்) பொருத்தப்பட்டுள்ளன. முன்னதாக இதேபோன்ற ஸ்மார்ட் ஹெல்மெட்கள் துபாய், இத்தாலி மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டன. இதை கொண்டு ஒரே நிமிடத்தில் பலருக்கு உடல் வெப்ப சோதனை செய்ய முடியும்.

    ஸ்மார்ட் ஹெல்மெட்

    வழக்கமான ஸ்கிரீனிங் வழிமுறைகளை பயன்படுத்தினால் அதிக நேரம் ஆகும். அதாவது 20 ஆயிரம் பேர் அடங்கிய பகுதியில் 300 பேருக்கு சோதனை செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவ உதவியாளரான நீலு ஜெயின் தெரிவித்தார்.  

    இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்களை பயன்படுத்தும் போது இரண்டறை மணி நேரத்தில் 6 ஆயிரம் பேருக்கு சோதனை செய்துவிட முடியும். இவை மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இரு நகரங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

    சோதனை அதிவேகமாக செய்துவிடும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் விலை ரூ. 6 லட்சம் ஆகும். இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
    Next Story
    ×