search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10 சீரிஸ்
    X
    கேலக்ஸி நோட் 10 சீரிஸ்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 ரென்டர்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது. கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீடு பற்றிய விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியான நிலையில், ரென்டர்கள் லீக் ஆகியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட்  20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது. புகைப்படங்களில் பார்க்க ஸ்மார்ட்போனின் பெசல்கள் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் காணப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 20 ரென்டர்

    ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

    வெளியீட்டை பொருத்தவரை கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் அறிமுகமாகும் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
    Next Story
    ×