search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 9
    X
    ரெட்மி நோட் 9

    ஆக்டா கோர் பிராசஸருடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்

    ஆக்டா கோர் பிராசஸர், OLED டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் M200J7AC எனும் மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    மேலும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி M200J7AC மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இது டிமென்சிட்டி 800 அல்லது டிமென்சிட்டி 800 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ரெட்மி போன் ரென்டர்

    மேலும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 4 ஜிபி, 6ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
     
    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் 4420 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×