search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லாவா இசட்71
    X
    லாவா இசட்71

    ரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

    லாவா நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்71 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 
    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    லாவா இசட்71

    லாவா இசட்71 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய லாவா இசட்71 ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளூ மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×