search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்
    X
    கேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்

    புதிய பெயரில் அறிமுகமாகும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் புதிய பெயரில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை கேலக்ஸி புளூம் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பினை 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் நடைபெற்ற ரகசிய சந்திப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    கேலக்ஸி புளூம் வடிவமைப்பு ஆடம்பர காஸ்மெடிக்ஸ் பிராண்டு லான்கோமின் பவுடர் காம்பேக்டை சார்ந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஃபோல்டு தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட வித்தியாசமாக இருக்கும். இதில் மிக மெல்லிய கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களில் ஸ்னாப்டிராகன் 865 சிலிகான் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அனைத்து பகுதிகளிலும் இம்முறை ஸ்னாப்டிராகன் பிராசஸர்களே வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா கேலக்ஸி நோட் 10 மாடலில் உள்ள சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
    Next Story
    ×