search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 8 ப்ரோ
    X
    ரெட்மி நோட் 8 ப்ரோ

    வெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

    ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதனை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



    சீனாவில் ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி நோட் 8 சீரிஸ் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 8 சீரிஸ் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்களின் மேம்பட்ட மாடல் ஆகும். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் குவாட் கேமரா அமைப்பு, 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 8 ப்ரோ பேட்டரி

    பத்து லட்சம் முன்பதிவுகளை சியோமி தனது வெய்போ கணக்கில் தெரிவித்தது. முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் சர்வதேச சந்தையில் இரண்டு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்தது. 

    சமீபத்திய டீசரின் படி ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களின் கேமிங் அக்சஸரிக்களுக்கான சப்போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இவற்றில் லிக்விட் கூலிங் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் மற்றும் 25x சூம் வசதி வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டீசர் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்.பி. கேமரா எடுத்த புகைப்படங்களையும் சியோமி அவ்வப்போது வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் ரெட்மி நோட் 8 சீரிஸ் அதன்பின் இந்தியா உள்பட மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

    Next Story
    ×