search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உருவாக்க காப்புரிமையை வென்ற ஆப்பிள்
    X

    மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உருவாக்க காப்புரிமையை வென்ற ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்கிரீனினை உருவாக்குவதற்கென புதிய காப்புரிமையை வென்று இருக்கிறது.



    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் முயற்சிகளில் ஆப்பிள் புதிய காப்புரிமையை பெற்றிருக்கிறது. புதிய காப்புரிமையின் படி ஆப்பிள் தனது சாதனங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களை பயன்படுத்த முடியும்.

    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய காப்புரிமையில் மடிக்கக்கூடிய அல்லது வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே கொண்ட சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த விண்ணப்பத்தை ஆப்பிள் நிறுவனம் 2018 ஜனவரி மாதத்தில் சமர்பித்து இருந்தது.

    இத்துடன் அந்நிறுவனம் பல்வேறு இதர தொழில்நுட்பங்களுக்கும் காப்புரிமை வழங்க விண்ணப்பித்து இருந்தது. இவற்றில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கும் அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. முன்னதாக டச் சென்சார்கள் கொண்ட மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருந்தது.



    பிப்ரவரி 2019 இல் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு அல்லது மூன்று பாகங்களில் மடியக்கூடிய வகையில் இருப்பது பற்றிய வரைப்படங்களை சமர்பித்து இருந்தது. இந்த டிஸ்ப்ளே மொபைல் போன், டேப்லெட், லேப்டாப், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மொபைல் அக்சஸரீகளில் பயன்படுத்த முடியும்.

    சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய சாதனத்தை 2021 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×