என் மலர்
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் - ஷாக் கொடுக்கும் ஃபேஸ்புக்
இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Instagram
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும் இயக்கக்கூடிய வகையில் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிவித்தது.
இவற்றை அந்நிறுவன ஊழியர்கள் மிக எளிமையாக இயக்கும் வகையில் இருந்தது இன்ஸ்டா வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து கூறும் போது, கடவுச்சொற்கள் நிறுவனத்தின் உள்புற சர்வெர்களில் சேமிக்கப்பட்டிருந்தது, அவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.

தற்சமயம் ஃபேஸ்புக் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் விவரங்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த சம்பவத்தில் சில ஆயிரம் பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.
மார்ச் மாதத்தில் இந்த பிழை காரணமாக பல லட்சம் ஃபேஸ்புக் லைட் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் லைட் செயலி குறைந்த மெமரியில் பழைய மொபைல் போன்கள் அல்லது இணைய வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Next Story






