search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நான்கு நோட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சாம்சங்
    X

    நான்கு நோட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சாம்சங்

    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10



    சாம்சங் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கேலக்ஸி எஸ் ஃபிளாக்‌ஷிப் சீரிசில் எஸ்10, எஸ்10 பிளஸ், எஸ்10இ மற்றும் எஸ்10 5ஜி என நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் இதே வழக்கத்தை பின்பற்றி நான்கு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து கொரியாவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 நான்கு வித அளவுகளில் வெளியாகும் என்றும் இதன் டாப்-எண்ட் மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவற்றில் இரண்டு எல்.டி.இ. மாடல்கள் 6.28 இன்ச் மற்றும் 6.75 இன்ச் அளவுகளை கொண்டிருக்கும் என்றும் மற்ற இரண்டு மாடல்களில் வெவ்வேறு டிஸ்ப்ளேக்கள் ஒரே மாதிரியான கேமரா சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி நோட் 10 டிஸ்ப்ளே அளவு பற்றிய தகவல்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும். புதிய நோட் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது கேலக்ஸி எஸ்10 சீரிசில் வழங்கப்பட்டிருப்பதை போன்றிருக்கும் என தெரிகிறது. 

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் நான்கு மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் குறிப்பிடத்தகுந்த வகையில் பிரிக்க முடியும் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×