என் மலர்
தொழில்நுட்பம்

புகைப்படம் நன்றி: Nazrin Zain | tomsguide
18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
எனர்ஜைசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #EnergizerP18KPop
ஸ்மார்ட்போன் சந்தையில் அனைத்து மாடல்களிலும் பொதுவான பிரச்சனையாக பேட்டரி பேக்கப் இருக்கிறது. மலிவு விலை மாடல்களில் இருந்து ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்திலும் அதிகபட்சம் ஒருநாள் பேட்டரி பேக்கப் கிடைப்பதே பெரிய காரியமாக இருக்கிறது.
இந்நிலையில், எனர்ஜைசர் நிறுவனம் அதிகளவு பேட்டரி திறன் கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்தது. எனர்ஜைசர் P18K பாப் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட அதிக திறன் கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் 18 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இத்தகைய பேட்டரி கொண்டிருப்பதால் எனர்ஜைசர் ஸ்மார்ட்போனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் தொடர்ச்சியான வீடியோ பிளேபேக் இரண்டு நாட்களுக்கு வழங்கும் திறன் கொண்டுள்ளது.
எனர்ஜைசர் P18K பாப் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டிருக்கும் எனர்ஜைசர் P18K பாப் ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகும்.
புகைப்படம் நன்றி: Nazrin Zain | tomsguide
Next Story






